குடிபோதையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தவர் பரிதாப சாவு
குடிபோதையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தவர் பரிதாபமாக இறந்தார்.
குடியாத்தம்
குடிபோதையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தவர் பரிதாபமாக இறந்தார்.
குடியாத்தத்தை அடுத்த செட்டிகுப்பம் கிராமம் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 53). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த சில ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு வெளியே அண்ணாதுரை திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அண்ணாதுரையின் அலறல் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.