இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது


இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
x

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் அடைக்கம்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கமல் (வயது 27). இவர் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலை தேடிவந்தனர்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று கமலை கைது செய்தனர். பின்னர் அவர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



Next Story