கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது


கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
x

மாட்டுவண்டியில் மணல் ஏற்றி சென்றவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு மலையப்பநகரைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 27). இவர் மணல் மாட்டுவண்டி ஓட்டிவருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது மாட்டு வண்டியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் எடுத்துக்கொண்டு பஞ்சக்கரை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் அவரை மறித்து, தகராறு செய்ததுடன், கத்தியை காட்டி மிரட்டி ரெங்கநாதனிடம் இருந்து ஆயிரம் ரூபாைை பறித்துச்சென்றார். இதுகுறித்து ரெங்கநாதன் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவரிடம் பணத்தை பறித்துச்சென்றது, திருவானைக்காவல் நந்தவனம் வடக்கு 5-வது பிரகாரம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவரின் மகன் மனோஜ் (20) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கத்தி மற்றும் பணத்தை கைப்பற்றினார்கள். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story