கத்தியை காட்டி செல்போன் பறித்தவர் கைது
தூத்துக்குடியில் கத்தியை காட்டி செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 53). இவர் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ராஜாஜி பூங்கா பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சின்னத்துரையிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மகேஷ் குமார் மகன் டேனியல் ராஜ் (22) மற்றும் சிலர் சேர்ந்து சின்னதுரையிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் டேனியல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட டேனியல்ராஜ் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.