பெண்ணை தகாத வார்த்தையால் பேசியவர் கைது


பெண்ணை தகாத வார்த்தையால் பேசியவர் கைது
x

பெண்ணை தகாத வார்த்தையால் பேசியவர் கைது

கன்னியாகுமரி

குலசேகரம்:

பேச்சிப்பாறை அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது 37). இவருடைய வீட்டின் அருகே சாரோடு வலியவிளையைச் சேர்ந்த ஷாஜூ (27) என்பவரின் பாட்டியின் வீடு உள்ளது. நேற்று முன்தினம் ஷாஜூ தனது பாட்டி வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வரும் குறுகலான வழிபாதையில் ஜெயசுதா எதிரே வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஷாஜூ ஜெயசுதாவை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதுகுறித்து ஜெயசுதா பேச்சிப்பாறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜூவை கைது செய்தனர்.


Next Story