வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
கள்ளக்குறிச்சியில் தகராறை தட்டிக்கேட்ட வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்
கள்ளக்குறிச்சி
லிப்ட் கேட்டதால் தகராறு
கள்ளக்குறிச்சி சிறுவங்கூரை சேர்ந்தவர் அன்பழகன் மகன் சந்திரசேகர்(வயது 29). இவர் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள அம்பேத்கர் சிலை அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சோழன் மகன் மணிகண்டன்(22) என்பவரிடம் ஒருவர் லிப்ட் கேட்டதால் அவரை மணிகண்டன் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
கத்திக்குத்து
இதை அருகில் நின்ற சந்திரசேகர் தட்டிக்கேட்டபோது ஆத்திரம் அடைந்த மணிகண்டன் ஆபாசமாக திட்டியதோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை மிரட்டல் விடுத்துசென்றதாக தெரிகிறது.
இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவுசெய்து மணிகண்டனை கைது செய்தனர்.