கோவில் உண்டியலில் பணத்தை திருடியவர் கைது


கோவில் உண்டியலில் பணத்தை திருடியவர் கைது
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கோவில் உண்டியலில் பணத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேலாயுதபுரம் மேம்பாலத்திற்கு கீழ் முனியசாமி கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக சங்கரலிங்க புரம் 3-வது தெருவைச் சேர்ந்த செண்பக வல்லி என்பவர் உள்ளார். இவர் கடந்த 21-ந் தேதி இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். மறுநாள் அதிகாலை கோவில் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது, கோவிலில் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் கோவில்பட்டி- பசுவந்தனை சாலையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சக்தி கணேஷ் (வயது 38) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் மற்றும் போலீசார் கைது செய்தனர்.


Next Story