சரக்கு வேனை திருடியவர் கைது
சரக்கு வேனை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
கரூர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்துள்ள சிந்தலவாடி தேசிய நெடுஞ்சாலையை சேர்ந்தவர் குழந்தைவேல்(வயது 42). இவர் தனக்கு சொந்தமான சரக்கு வேனை தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் அந்த சரக்கு வேன் திருட்டுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து லாலாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கீழவாளாடியை சேர்ந்த பாரதிராஜா(33) என்பவர் சரக்கு வேனை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story