ஆடுகளை திருடியவர் கைது


ஆடுகளை திருடியவர் கைது
x

ஆடுகளை திருடியவர் கைது

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டில் வசிப்பவர் ஜான்சுல்தான்(வயது62). இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். இவரது வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் நேற்று ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். காலையில் ஆட்டுகொட்டகையில் வந்து பார்த்த போது அடைத்து வைத்திருந்த 2 ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் ஜான் சுல்தான் புகார் செய்தாா். அதன்ே்பரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய கோடியக்காடு பகுதியை சேர்ந்த விஜய்(22) என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய தலைமறைவான கோடியக்காட்டை சேர்ந்த அஜீத்(22) என்பவரை தேடி வருகின்றனர். விஜய்யிடம் இருந்து 2 ஆடுகள் மீட்கப்பட்டு ஜான்சுல்தானிடம் ஒப்படைக்கப்பட்டது.


Related Tags :
Next Story