சிக்கன்கடைக்காரரை மிரட்டியவர் கைது
சிக்கன் கடை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்
சிக்கன் கடை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் பக்ருதீன் மகன் தாஜூதின் (வயது 29). இவர் சேண்பாக்கத்தில் சிக்கன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் சேண்பாக்கத்தை சேர்ந்த ஏகாம்பரம் மகன் சிவமணி (33) சிக்கன் சாப்பிட்டுள்ளார். பின்னர் சிவமணியிடம் சிக்கனுக்கு தாஜூதின் பணம் கேட்டுள்ளார். அதற்கு சிவமணி பணம் தர மறுத்து தாஜூதினை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story