தனியார் நிறுவன மேலாளரை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
தனியார் நிறுவன மேலாளரை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
தஞ்சாவூர்
மதுக்கூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கறம்பக்குடி சுக்கிரன்விடுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது36) என்பவர் மேலாளராக உள்ளார். இந்த நிறுவனத்தில் ஆவிக்கோட்டையை சேர்ந்த பாரதிராஜன் (40) என்பவர் மனைவி தமிழ்தென்றல் வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று சந்திரசேகர், தமிழ்தென்றலை சரிவர வேலை செய்யவில்லை என கண்டித்துள்ளார். இதில் மனம் உடைந்த தமிழ்தென்றல், தனது கணவர் மற்றும் உறவினர் ராஜேஷ்கண்ணன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பாரதிராஜன், சந்திரசேகரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து மதுக்கூர் போலீசில் சந்திரசேகர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதிராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story