பெண்ணை மிரட்டியவர் கைது
பெண்ணை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்
திருநெல்வேலி
தாழையூத்து மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு மேலதாழையூத்தை சேர்ந்த சுப்புலெட்சுமி என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த போது சுப்புலெட்சுமியிடம் ரூ.46 ஆயிரம் கடன் பெற்று கொண்டு ரூ.17 ஆயிரம் மட்டும் திரும்ப கொடுத்துள்ளார். மீதி பணம் தர மறுத்து, கடந்த 24-ந் தேதி சுப்புலெட்சுமி வீட்டில் இல்லாத போது அவரது மகளை பார்த்து பணம் எப்படி நீங்கள் கேட்கலாம்? என அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுப்புலெட்சுமியின் மகள் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் செல்லதங்கம் வழக்குப்பதிவு செய்து முருகனை நேற்று கைது செய்தார்.
Related Tags :
Next Story