பெண்ணை மிரட்டியவர் கைது


பெண்ணை மிரட்டியவர் கைது
x

பெண்ணை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

பத்தமடை பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி (வயது 31) என்பவர், தாய் மற்றும் தம்பியுடன் வீட்டின் முன்பு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற கார்த்திக் (25) என்பவர் சுப்புலட்சுமியின் தம்பியை அவதூறாக பேசியுள்ளார். அதற்கு காளீஸ்வரன் என்ற கார்த்திக்கிடம், எதற்கு என் தம்பியை அவதூறாக பேசுகிறாய்? என்று சுப்புலட்சுமி கேட்டதற்கு அவரையும் அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுப்புலட்சுமி பத்தமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளீஸ்வரன் என்ற கார்த்திக்கை கைது செய்தனர்.


Next Story