தூத்துக்குடியில் தொழிலாளியை மிரட்டியவர் கைது


தூத்துக்குடியில் தொழிலாளியை மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தொழிலாளியை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபிசுஜின்ஜோஸ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி ராமர்விளையை சேர்ந்த சேக் ஆடம் மகன் மேப்ஜான் என்ற மகபூப் என்பதும், அந்த பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் மேப்ஜான் என்ற மகபூப்பை கைது செய்தனர்.


Next Story