பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது


பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது
x

பாளையங்கோட்டை அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலபாலாமடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் எபினேசர் (வயது 34). இவர் நேற்று முன்தினம் ஒரு பெண்ணின் விட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயன்று உள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போடவே, அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து எபினேசரை நேற்று கைது செய்தார்.


Next Story