நண்பரை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
நண்பரை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஒடுகத்தூரை அடுத்த அத்தி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகு (வயது 36). இவரும் ஓ.ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சீனுவும் (36) நண்பர்கள். கூலி வேலை செய்து வந்த இருவரும் வேலை முடிந்த பிறகு தினமும் மாலை நேரத்தில் அவ்வப்போது மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு வேலை முடித்துவிட்டு வழக்கம்போல் இருவரும் சேர்ந்து குடித்துள்ளனர்.அப்போது இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினையால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த லோகு தனது நண்பன் சீனுவை கத்தியால் குத்தி கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தள்ளது.
கடந்த இரண்டு வருடமாக லோகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் லோகுவை பிடித்து கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.
இந்த நிலையில் லோகு ஈரோட்டில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் ஈரோட்டுக்கு விரைந்து சென்று லோகுவை கைது செய்தனர். பின்னர் லோகுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.