கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
குன்னம் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மாக்காய்குளம் கிராமம், தெற்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் குடும்பத்திற்கும், அதே தெருவில் வசிக்கும் நடராஜன் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி மாலை ராமலிங்கபுரத்தில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் கியாஸ் குடோன் அருகே நடராஜனின் உறவினர் செல்லதுரை மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து ராமச்சந்திரனை கொலை செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராமனை (வயது 33) கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அரியலூர், செந்துறை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் குன்னம் பஸ் நிலையத்தில் இருந்த ராமனை மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.