இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கோர்ட்டில் சரணடைந்தார்
இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் தூத்துக்குடி கோர்ட்டில் சரணடைந்தார்
தூத்துக்குடி அருகே பேரூரணியில் கடந்த 22.6.2016-ல் திருமண நிகழ்ச்சியின்போது டிஜிட்டல் பேனர் கட்டுவதில் தகராறு ஏற்பட்டு பிரையன்ட்நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் காசிராஜன், குலையன்கரிசல் வாலிபர் ராஜலிங்கம் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் பேரூரணியை சேர்ந்த ராஜ்குமார் மகன் விக்ரம் (வயது 28) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு கோர்ட் விக்ரமுக்கு 2 ஆயுள் தண்டனை விதித்தது. இதில் மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ததில் கடந்த 23.12.2021ல் தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது. அப்போது ஜாமீனில் சென்ற விக்ரம் தலைமறைவானார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் விக்ரம் நேற்று தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் சரணடைந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து விக்ரமை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் விக்ரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.