மார்த்தாண்டம் அருகேபோதையில் தவறி விழுந்த மெக்கானிக் சாவு


மார்த்தாண்டம் அருகேபோதையில் தவறி விழுந்த மெக்கானிக் சாவு
x

மார்த்தாண்டம் அருகேபோதையில் தவறி விழுந்த மெக்கானிக் இறந்தார்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே உள்ள முளங்குழி தூணுமூட்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது40), மெக்கானிக். இவருக்கு சுஜி (24) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சுனிலுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு எனத்தெரிகிறது. இவர் சம்பவத்தன்று முளங்குழி பகுதியில் சாலையில் மதுபோதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி ஒரு சிறிய பள்ளத்தில் குப்புற விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் காது பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story