தீக்குளித்த வியாபாரி சாவு


தீக்குளித்த வியாபாரி சாவு
x
தினத்தந்தி 8 Jun 2023 12:45 AM IST (Updated: 8 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் தீக்குளித்த வியாபாரி இறந்தார்.

திண்டுக்கல்

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் பயாஸ் அகமது ராஜா (வயது 56). இவரும், அவரது சகோதரருமான சபீர் அகமது ராஜாவும் கொடைக்கானலில், 7 ரோடு சந்திப்பு அருகே உள்ள கவி தியாகராஜர் சாலையில் கைவினை பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சகோதரர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கடையை 2 ஆக பிரித்து அவர்கள் வியாபாரம் செய்து வந்தனர். அதாவது கடையின் மேல் தளத்தில் பயாஸ் அகமது ராஜாவும், கீழ்தளத்தில் சபீர் அகமது ராஜாவும் கடை வைத்து வியாபாரம் செய்தனர். இதற்கிடையே கடையின் வழியாக மழைநீர் செல்வதில் சகோதரர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பயாஸ் அகமது ராஜா நேற்று முன்தினம் தனது கடையின் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில், படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பயாஸ் அகமது ராஜா உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஆசியா கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story