நாகர்கோவிலில் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி கடைக்குள் புகுந்தது

நாகர்கோவிலில் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி கடைக்குள் புகுந்தது
x

நாகர்கோவிலில் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி கடைக்குள் புகுந்தது

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி கடைக்குள் புகுந்தது

நெல்லை மாவட்டத்தில் இருந்து நேற்று வாழை குலைகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி களியக்காவிளை நோக்கி புறப்பட்டது. அந்த லாரி இரவு 9 மணியளவில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள பள்ளிவாசல் முன் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது லேசாக உரசியது. பின்னர் சாலையோரம் நின்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அங்கிருந்த ஒரு பலசரக்கு கடைக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் மினிலாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story