10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மீனவ சமூகத்தில் அதிக மதிப்பெண் :மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று திருவள்ளுவர் சிலையை பரிசளித்த அமைச்சர்


10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மீனவ சமூகத்தில் அதிக மதிப்பெண் :மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று திருவள்ளுவர் சிலையை பரிசளித்த அமைச்சர்
x

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மீனவ சமூகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியின் வீட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பரிசு வழங்கினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மீனவ சமூகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியின் வீட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பரிசு வழங்கினார்.

மாணவிக்கு...

குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் வந்தார். அவர் குமரி மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மணக்குடியை சேர்ந்த மாணவி ஆரோக்கிய சஞ்சனா வீட்டிற்கு நேற்று திடீரென சென்றார். அவருடன் மேயரும், கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான மகேஷ் உள்ளிட்ட பலரும் சென்றனர். மாணவி ஆரோக்கிய சஞ்சனா மணக்குடி லிட்டில் பிளவர் உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் மீனவ சமுதாயத்தில் மாவட்ட அளவில் 465 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் மாணவி ஆரோக்கிய சஞ்சனாவின் தந்தை ஆரோக்கியதாசன் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். தாய் லைசா தையல் தொழில் செய்து வருகிறார்.

திருவள்ளுவர் சிலை பரிசு

மாணவியின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மீனவ சமுதாயத்தில் அதிக மதிப்பெண் பெற்றமைக்காக மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததோடு, திருவள்ளுவர் சிலையை பரிசாக அளித்தார்.

அப்போது மாணவி ஆரோக்கிய சஞ்சனா எதிர் காலத்தில் கலெக்டராகி, ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என தனது ஆசையை தெரிவித்தார். தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மாணவியின் கல்விக்கான அனைத்து செலவையும் ஏற்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்தார்.

முன்னதாக கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை ரசாயன கலவை பூசும் பணி நடந்து வரும் நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயரும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் ஆகியோர் தனி படகில் சென்று ஆய்வு செய்தனர்.


Next Story