குலை தள்ளிய அதிசய சேனைக்கிழங்கு செடி


குலை தள்ளிய அதிசய சேனைக்கிழங்கு செடி
x

கருங்கல் அருகே குலை தள்ளிய அதிசய சேனைக்கிழங்கு செடி

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள கம்பிளார் புன்னவிளையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது75). முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர். இவர் தனது வீட்டின் முன்பு 18 சென்ட் நிலத்தில் சேனைக்கிழங்கு பயிர் செய்துள்ளார். இவரது தோட்டத்தில் ஒரு சேனைக்கிழங்குச் செடியில் வாழை குலை போன்று குலை தள்ளியுள்ளது. இந்த குலைய அந்த பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது 'சேனைக்கிழங்கு செடியில் பூ பூத்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், பூவில் இருந்து அதிசயமாக வாழை குலை தள்ளியது போன்று இருப்பதை இப்போதுதான் பார்க்கிறோம்' என்றனர்.


Next Story