காணாமல் போன மூதாட்டி ஓடையில் பிணமாக கிடந்தார்


காணாமல் போன மூதாட்டி ஓடையில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அருகே காணாமல் போன மூதாட்டி ஓடையில் பிணமாக கிடந்தார்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை அருகே முக்கூட்டுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கஸ்தூரிரங்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ராமர் மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 85). இவரது கணவர் ராமர் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். அப்பகுதி உறவுக்கார பெண் ஒருவரிடம் கிருஷ்ணம்மாள் சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணம்மாள் திடீரென மாயமானார். அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மகன் காளிமுத்து, கழுகுமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணம்மாளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கஸ்தூரிெரங்கபுரம் ஊருக்கு அருகே சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓடையில் அழுகிய நிலையில் எலும்புகூடாக பெண் சடலம் ஒன்று கிடப்பதாக கழுகுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், பிணமாக கிடந்தவர் கஸ்தூரிரங்கபுரத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story