மதிப்பூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்


மதிப்பூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்
x

மதிப்பூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என சிவகாசி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

விருதுநகர்

சிவகாசி,

மதிப்பூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என சிவகாசி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

யூனியன் கூட்டம்

சிவகாசி யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் விவேகன்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவஆசீர் வாதம், புகழேந்தி ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

39 வளர்ச்சி பணிகள் செய்ய கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர். அதன் விவரம் வருமாறு:-

மதிப்பூதியம்

கவுன்சிலர் ஆழ்வார் ராமானுஜம்: நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தமிழக அரசு மதிப்பூதிய தொகையை உயர்த்தி அறிவித்ததை போல கிராமப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் மதிப்பூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இவரது கருத்தை பெரும்பாலான கவுன்சிலர்கள் வரவேற்றனர்.

தலைவர்: கவுன்சிலர்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பு குறித்து அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படும்.

மீனாட்சிசுந்தரி: ஆர்.சி.தெரு மிகவும் மோசமாக உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்.

சமுதாய கூடம்

நாகம்மாள்: பெரியபொட்டல் பகுதியில் இருந்த பஸ் நிறுத்தம் சேதமடைந்த நிலையில் இடித்து அகற்றப்பட்டது. அந்த பகுதியில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்.

சின்னதம்பி: விஸ்வநத்தம் முருகையாபுரத்தில் புதிய சமுதாய கூடம் கட்டி கொடுக்க வேண்டும். அதேபோல் சிவகாமிபுரத்தில் கழிவறையும், சமுதாயகூடமும் கட்டி கொடுக்க வேண்டும்.

அன்பரசு: எனது கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதியில் மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்கையா: அதிகாரிகளின் நடவடிக்கையால் இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் தான் ஏற்படுகிறது. நாங்கள் கூறும் குறைகளை கேட்க அதிகாரிகள் தயங்கும் நிலை உள்ளது.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


Next Story