இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் மாயம்


இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் மாயம்
x

விருதுநகரில் இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் மாயமானது.

விருதுநகர்

சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் சக்கையா (வயது 47). இவர் விருதுநகர் ரங்கநாதபுரம் பகுதியில் நடந்த உறவினர் திருமணத்திற்கு வந்துவிட்டு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தில் பெட்டியில் வைத்திருந்த ரூ.10ஆயிரம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுபற்றி சக்கையா கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Next Story