செண்பகராமன்புதூர் அருகேஅட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் சிக்கின
செண்பகராமன்புதூர் அருகேஅட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் சிக்கின
கன்னியாகுமரி
ஆரல்வாய்மொழி:
செண்பகராமன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நெசவாளர்காலனி அருகே ஒரு தனியார் நிறுவனத்திற்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இதையடுத்து அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று நிறுவனத்தின் சார்பில் நாகர்கோவில் வனத்துறை தலைமை அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு கூண்டு வைத்தனர். அதில் 4 குரங்குகள் சிக்கின. மற்ற குரங்குகள் கூண்டில் சிக்காமல் தப்பிச் சென்றன. இதையடுத்து பிடிபட்ட குரங்குகளை மலைப்பகுதியில் கொண்டுவிடப்பட்டது. மற்ற குரங்குகளை பிடிக்க மீண்டும் அங்கு கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story