மொபட் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பெண் சாவு
விளாத்திகுளம் அருகே மொபட் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பெண் பரிதாபமாக பலியானார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே மொபட் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பெண் பரிதாபமாக பலியானார்.
டெய்லர்
விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரைச் சேர்ந்த சந்தனமகாலிங்கம் மனைவி வீரசெல்வி (வயது 42). இவர் புதூரில் டெய்லரிங் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் விளாத்திகுளத்தில் உள்ள ஷோரூமில் புதிய மொபட் வாங்கியுள்ளார். அதை ஓட்டிக் கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். புதூர் அருகே செங்கோட்டை விலக்கு பகுதியில் சென்ற போது திடீரென நிலை தடுமாறிய மொபட் சாலையில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட வீரசெல்வி படுகாயம் அடைந்தார்.
சாவு
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மீட்டு புதூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய மொபட் வாங்கி கொண்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.