டிரைவரை மிரட்டி மோட்டார் சைக்கிள் எரிப்பு


டிரைவரை மிரட்டி மோட்டார் சைக்கிள் எரிப்பு
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குருந்தன்கோடு பகுதியில் டிரைவரை மிரட்டி மோட்டார் சைக்கிள் எரிப்பு

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

குருந்தன்கோடு பகுதியில் டிரைவரை மிரட்டி மோட்டார் சைக்கிள் எரிப்பு

வெள்ளிச்சந்தை அருகே உள்ள செக்கடிவிளை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27), டிரைவர். இவருடைய நண்பர் பிரகாஷ். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரகாசுக்கும், குருந்தன்கோடு சாஸ்தா சாலையை சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை ராஜேஷ் தடுத்து சமாதானம் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை குருந்தன்கோடு வந்த ராஜேஷை குருந்தன்கோடு யூனியன் அலுவலகம் முன்பு வைத்து அய்யப்பனும் கண்டால் தெரியும் ஒரு நபரும் சேர்ந்து ராஜேஷை தடுத்து நிறுத்தி வழிமறித்துள்ளனர். அவரை அவதூறாக பேசிய அய்யப்பன் மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள ஆற்றுக்குள் தள்ளி தீவைத்து விட்டு மிரட்டி சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜேஷ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அய்யப்பன் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story