கார் மீது மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது


கார் மீது மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது
x

கார் மீது மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்:

வெள்ளமடம் சகாயநகரை சேர்ந்தவர் தனிஷ் (வயது 20). இவர் நேற்று மதியம் தன்னுடைய நண்பருடன் வழுக்கம்பாறை-அஞ்சுகிராமம் சாலையில் புன்னார்குளம் சந்திப்பை கடந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது முன்னால் ஒரு கார் சென்றது. இந்த காரை ஓட்டிய டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். இதனை எதிர்பார்க்காத தனிஷ் ஓட்டிய மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தனிஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். நண்பருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் எதிரே வந்த லாரியின் அடிப்பகுதியில் இருசக்கர வாகனம் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதற்கிடையே அங்கு வந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். எனினும் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.

அதே சமயத்தில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story