மோட்டார்சைக்கிளில் சென்றவர் ரோட்டில் தவறி விழுந்து படுகாயம்
மோட்டார்சைக்கிளில் சென்றவர் ரோட்டில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை செந்தில்குமார் எம்.எல்.ஏ. மீட்டு முதலுதவிக்கு ஏற்பாடு ெசய்தார்.
வாணியம்பாடி
மோட்டார்சைக்கிளில் சென்றவர் ரோட்டில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை செந்தில்குமார் எம்.எல்.ஏ. மீட்டு முதலுதவிக்கு ஏற்பாடு ெசய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த பாங்கூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). டிரைவரான இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஆலங்காயம் - வாணியம்பாடி சாலையில் கொத்த கொட்டை பகுதியில் சென்றபோது திடீரென உடல் சோர்வு ஏற்பட்டு கீழே விழுந்து முகம் மற்றும் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையில் விழுந்தார்.
அப்போது ஆலங்காயம் பகுதியில் கட்சி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, கோ.செந்தில்குமார் வந்து கொண்டிருந்தார். உடனடியாக வாகனத்தை நிறுத்திய அவர் செல்வத்தை மீட்டு, தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் வாகனத்தை வரவழைத்து சம்பவ இடத்திலேயே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க உதவி செய்தார்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.