கல்லம்பட்டியில் மலைப்பாம்பு பிடிபட்டது


கல்லம்பட்டியில் மலைப்பாம்பு பிடிபட்டது
x

கல்லம்பட்டியில் மலைப்பாம்பு பிடிபட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே மதியநல்லூர் கல்லம்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே மலைப்பாம்பு கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை நார்த்தாமலை காப்புகாட்டில் கொண்டுவிட்டனர்.


Next Story