மண் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
மண் சுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார்
திருச்சி
துறையூர் தாலுகா, கண்ணனூர் அருகே கீரிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்பாவு (வயது 70). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளியம்மை (55). கடந்த சில நாட்களாக கீரிப்பட்டி பகுதியில் மழை பெய்து வந்தது. இதனால் வள்ளியம்மையின் வீட்டு மண் சுவர் பொதும்பி இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று மண்சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் வள்ளியம்மை சிக்கினார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு துறையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து வருவாய்த் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story