டாக்டர் வீட்டில் திருட்டு போன நகைகளை வாசலில் வீசி சென்ற மர்மநபர்கள்-போலீசார் விசாரணை


டாக்டர் வீட்டில் திருட்டு போன நகைகளை வாசலில் வீசி சென்ற மர்மநபர்கள்-போலீசார் விசாரணை
x

டாக்டர் வீட்டில் திருட்டு போன நகைகளை வாசலில் வீசி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டி மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது45). இவருடைய மனைவி பிரியதர்ஷினி (40). டாக்டரான சசிகுமார் பனமரத்துப்பட்டியை அடுத்த கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் சர்ஜிகல் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகள், ரூ.1.40 லட்சம் ஆகியன மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நேற்று அதிகாலையில் சசிகுமார் வீட்டின் கதவை திறக்க வெளியே வந்து பார்த்த போது அங்கே ஒரு மஞ்சள் பை கிடந்தது. அதை எடுத்து பார்த்த போது அதில் திருட்டு போன நகைகள் இருந்ததை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். உடனே நகைகளை மனைவியிடம் காண்பித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இருந்தாலும் நகைகளை டாக்டர் வீட்டின் முன்பு வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story