நாகை-தஞ்சை இருவழி சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்
நாகை-தஞ்சை இருவழி சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் இந்திய வர்த்தக தொழில் குழுமம் வலியுறுத்தி உள்ளது.
வெளிப்பாளையம்:
நாகையில் இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் 55-வது பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சலீமுதீன் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை நகராட்சி தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தீர்மானங்களை வலியுறுத்தி செயலாளர் கணேசன், பொருளாளர் சேகர் ஆகியோர் பேசினர். நாகை- தஞ்சை இருவழி சாலை பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். புத்தூர் ரவுண்டானாவில் இருந்து மேலகோட்டைவாசல் பாலம் வரை சாலையை அகலப்படுத்த வேண்டும். நாகை தோணித்துறை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இணை செயலாளர் முகமது பக்ருதீன் நன்றி கூறினார்.