தமிழக அரசு இணையதளத்தில் துறைகள் குறிப்பிடாமல் இடம்பெற்றுள்ள செந்தில் பாலாஜியின் பெயர்..!


தமிழக அரசு இணையதளத்தில் துறைகள் குறிப்பிடாமல் இடம்பெற்றுள்ள செந்தில் பாலாஜியின் பெயர்..!
x

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பகிர்ந்தளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து கவர்னருக்கு கடிதம் அனுப்பினார்.

அதில் மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக அளிப்பதாக பரிந்துரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.


ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார் இதையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் பட்டியலில் துறைகள் குறிப்பிடாமல் செந்தில் பாலாஜி பெயர் இடம் பெற்றுள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Next Story