தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,665 வழக்குகள் விசாரணை


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,665 வழக்குகள் விசாரணை
x

நெல்லை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4 ஆயிரத்து 665 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4 ஆயிரத்து 665 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்பேரில், இந்த ஆண்டின் 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை உள்பட 9 தாலுகாக்களில் சட்டப்பணிகள் ஆணை குழுக்களால் 25 பேர் கொண்ட அமர்வுகளுடன் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றம், நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குமரகுரு தலைமையில் நடைபெற்றது. இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன், தலைமை குற்றவியல் நீதிபதி மனோஜ்குமார், சார்பு நீதிபதிகள் அமிர்தவேலு, இசக்கியப்பன், செந்தில்முரளி, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம், நீதிபதிகள் பன்னீர்செல்வம், தீபா, குமரேசன், விஜயகுமார், சந்தானம், வள்ளியம்மாள், திருவேணி, ஆறுமுகம், விஜய் ராஜ்குமார், பாக்கியராஜ், கவிபிரியா, அருண்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேசுவரன், செயலாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

4,665 வழக்குகள் விசாரணை

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சமரசமாக முடியக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 665 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதேபோல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத சுமார் 2 ஆயிரம் ‌வங்கி கடன் வழக்குகளும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து பல்வேறு விபத்து வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்ளுக்கு உரிய நிவாரணமாக காசோலைகள் வழங்கப்பட்டது.


Next Story