முதல் அறுவடை நெல்லை அழகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கும் நெல்கோட்டை கட்டும் விழா
முதல் அறுவடை நெல்லை அழகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கும் நெல்கோட்டை கட்டும் விழா
சோழவந்தான்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமம் மிகவும் வரலாற்றுப் முக்கியத்துவம் பெற்றது. மதுரையின் சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா இங்கு நடந்ததாகவும், அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் தேனூர் வைகை ஆற்றில் இறங்கியதாக கூறுகின்றனர். இதுகுறித்து இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, தேனூர் கிராமத்தில் தை மாதம் அறுவடை செய்யும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல் அழகர்கோவில் கள்ளழகருக்கு நெல் கோட்டையாக கட்டி கிராம வழக்கப்படி அனுப்பி வைக்கிறோம். இந்த ஆண்டு எங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கர் கிருஷ்ணன், தை மாதம் முதல் நெல் அறுவடை செய்துள்ளார் என்றார். இதையடுத்து நெல் கோட்டை கட்டுவதற்கு அங்குள்ள சுந்தரவல்லி அம்மன் கோவில் முன்பு நெல் குவிக்கப்பட்டது. அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, பொங்கல் வைத்து வழிபட்டனர். குவிக்கப்பட்ட நெல் குவியலுக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் தெளித்து பூஜைகள் செய்தனர். பின்னர் நெல் கோட்டை எடுத்துக்கொண்டுஅழகர்கோவில் சென்றனர்.
இதை பெற்றுக்கொண்ட கோவில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு கோவில் மரியாதை செய்வார்கள்.