அரளி இலையை அரைத்துக்குடித்து புதுப்பெண் தற்கொலை


அரளி இலையை அரைத்துக்குடித்து புதுப்பெண் தற்கொலை
x

அரளி இலையை அரைத்துக்குடித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

மின்னத்தூர் அருகே உள்ள ராமுடையான்பட்டியை சேர்ந்தவர் ரஜினிகாந்த், கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (24). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் கவுசல்யா அரளி இலையை அரைத்துக்குடித்து நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் தஞ்சாவூர் ஆர்.டி.ஓ. ரஞ்சித் விசாரணை நடத்தினார்.


Next Story