புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
x

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்க கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் பிலாவடியான் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சிவயோகம் வரவேற்றார்.

இணை செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் செயல் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் பிரகாசம் வரவு, செலவு அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பேரவை கூட்டத்தை வாழ்த்தி ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராம ஸ்ரீனிவாசன், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் புளுகாண்டி, போக்குவரத்து தொழிலாளர் ஓய்வூதிய நல அமைப்பின் தலைவர் தங்கப்பழம், மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் பேசினர். கருப்பையா, பேச்சிமுத்து, காளீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராம சுப்புராஜ், மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள்கோவில் பகுதியில் உள்ள காலி இடங்களில் பக்தர்கள் நலன்கருதி கழிப்பறை, குளியலறை வசதிகளுடன் பெருந்திட்ட சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், ஏனைய தொகுப்பு ஊதிய ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் செயற்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story