நீலகிரி அணைகள் 90 சதவீதம் நிரம்பியது


நீலகிரி அணைகள் 90 சதவீதம் நிரம்பியது
x

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணைகள் 90 சதவீதம் நிரம்பி உள்ளது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணைகள் 90 சதவீதம் நிரம்பி உள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகள்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுேதாறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்கிறது. நடப்பாண்டில் பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும், மழை தீவிரமாக பெய்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும், கனமழையும் பெய்கிறது. குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அங்கு கடந்த 4 நாட்களாக 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானது.

குறிப்பாக அவலாஞ்சியில் 20 செ.மீ., 32 செ.மீ. என அதிக மழைப்பொழிவு காணப்படுகிறது. இதனால் வனப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை அணைகளுக்கு வினாடிக்கு சராசரியாக 500 முதல் 600 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

முழு கொள்ளளவு

நீலகிரி மாவட்டத்தில் பெரிய அணையான 210 அடி கொள்ளளவு கொண்ட அப்பர்பவானி அணையின் நீர்மட்டம் 208 அடியாக உயர்ந்து உள்ளது. குந்தா அணை (89 அடி), சாண்டிநல்லா அணை (49 அடி), கெத்தை அணை (156 அடி) முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து உபரி நீர் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் பைக்காரா மின் வட்டத்திற்கு உட்பட்ட பைக்காரா, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, கிளன்மார்கன், மாயார் உள்ளிட்ட அணைகளுக்கு சராசரியாக 400 முதல் 450 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நீலகிரியில் உள்ள அணைகளில் 90 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது.

அணை நிலவரம்

நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீலகிரி அணைகளில் தண்ணீர் இருப்பு (அடி) நிலவரம்:-

1.முக்குறுத்தி-18-17.5

2.பைக்காரா-100-90

3.கிளன்மார்கன்-33-32

4.மாயார்-17-16.5

5.பார்சன்ஸ்வேலி-77-76

8.போர்த்தி மந்து-130- 128

9.அவலாஞ்சி-171-168

10.எமரால்டு-184-162


Next Story