செல்போன் கடையில் திருடிய வடமாநில வாலிபர்கள் 3 ேபர் சிக்கினர்


செல்போன் கடையில் திருடிய வடமாநில வாலிபர்கள் 3 ேபர் சிக்கினர்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:31+05:30)

கடையத்தில் செல்போன் கடையில் திருடிய வடமாநில வாலிபர்கள் 3 ேபர் சிக்கினர்

தென்காசி

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு 3 வாலிபர்கள் வந்தனர். அங்கு செல்போன் வாங்குவதுபோல் நின்றனர். பின்னர் அங்கு வேலைபார்க்கும் பெண்ணின் செல்போனை நைசாக திருடிச்சென்றனர். பின்னர் அந்த செல்போனை விற்பனை செய்ய மற்றொரு கடைக்கு சென்றனர். இதற்கிடையே அந்த பெண்ணின் செல்போன் திருடு போனது குறித்து கடையம் போலீசார் விசாரித்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலக்கினார்கள். விசாரணையில், செல்போனை திருடியது கோவிந்தபேரி பகுதியில் செங்கல் சூளையில் வேலைபார்க்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் என தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினர். செல்போனை மீட்டு அந்த பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.Next Story