ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது


ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
x

தொடர் மழை காரணமாக வார விடுமுறையில் ஏளகிரிமலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பத்தூர்

ஏலகிரி மலை

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 4-ந்் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பயணிகள் வருகை குறைவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தமிழக முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வார விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும் பலத்த மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் சுற்றுலா பயணிகள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் சாலையோர சிறு வியாபாரிகள் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டனர். மேலும் படகு சவாரி மற்றும் பூங்காவில் கூட்டம் இல்லாததால் கடந்த 2 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story