ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
ஏலகிரி மலை
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாட்டினரும் சுற்றுலா வருகின்றனர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளும் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது.
மேலும் ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா அம்சங்கள் சுற்றுலா பயணிகள் கண்டு களித்து செல்கின்றனர்.
வருகை குறைந்தது
கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் ஏலகிரி மலைக்கு சென்று சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
கோடை விடுமுறையையொட்டி ஏலகிரிமலைக்கு வரும் சுற்்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. தற்போது கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வாங்குவதற்கு செல்வதால் நேற்று முன்தினம் வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.