ஸ்கூட்டரில் இருந்து தடுமாறி கீழே விழுந்து நர்சு சாவு
மன்னார்குடி அருகே ஸ்கூட்டரில் இருந்து தடுமாறி கீழே விழுந்து நர்சு உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி, மே.8-
மன்னார்குடி அருகே ஸ்கூட்டரில் இருந்து தடுமாறி கீழே விழுந்து நர்சு உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நர்சு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பைங்காட்டூர் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் சரண்யா (வயது24). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சரண்யா பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
தடுமாறி கீழே விழுந்து படுகாயம்
அப்போது துளசேந்திரபுரம் புது ஆற்றுப்பாலம் அருகில் சென்ற போது நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து சரண்யா கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.