கீழே கிடந்த தங்க சங்கிலியை போலீசில் ஒப்படைத்த நர்சு


கீழே கிடந்த தங்க சங்கிலியை போலீசில் ஒப்படைத்த நர்சு
x

கீழே கிடந்த தங்க சங்கிலியை போலீசில் ஒப்படைத்த நர்சுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள மேலையூர் பகுதியில் வசித்து வருபவர் மகாலட்சுமி. இவர் மேலபெரும்பள்ளம் சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மேலையூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அந்த மையத்தின் அருகே தங்கச் சங்கிலி ஒன்று கீழே கிடந்தது. அதனை எடுத்த அவர், நேர்மையுடன் பூம்புகார் ேபாலீஸ் நிலையத்திற்கு சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினத்திடம் ஒப்படைத்தார். அந்த நகை யாருடையது என்று போலீசார் நடத்திய விசாரணையில், குரங்கு புத்தூர் பகுதியை சேர்ந்த பிரவீன்தாஸ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் நகையை இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார். கீழே கிடந்த நகையை நேர்மையுடன் ஒப்படைத்த நர்சு மகாலட்சுமியை போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். அந்த சங்கிலி சுமார் 2½ பவுன் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story