கண்களில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கண்களில் கருப்பு துணி கட்டி   சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கண்களில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மதுரை


மதுரை கலெக்டர் அலுவலக வளாத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு பென்சன் ரூ.6750-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், அரசுத்துறை காலிப்பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிடவும், காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் கவுரியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகேஸ்வரி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றினார், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில துணை தலைவர் சின்னப்பொண்ணு வாழ்த்துரை வழங்கினார். இதில், மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான், மாவட்ட இணை செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story