நாகர்கோவிலில் தலையில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் தலையில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் தலையில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெபமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கவிதா, செயலாளர் பொன் பாக்கிய தீபா, டயானா, பிரபாராணி, லூயிஸ் மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கண்ணிலும், தலையிலும் கருப்பு துணி கட்டி கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story