முதியவர் சாவு


முதியவர் சாவு
x

நெல்லை பேட்டையில் நடந்து சென்ற முதியவர் தவறி விழுந்து இறந்தார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பேட்டை நரசிங்கநல்லூர் திருவள்ளுவர் காலனி அருகே 85 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நரசிங்கநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார், சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பேட்டை சத்யா நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த பேச்சிமுத்து (85) என்பதும், நடந்து செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து அதிர்ச்சியில் இறந்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story