கொல்லங்கோடு அருகே மயங்கி கிடந்த முதியவர் சாவு


கொல்லங்கோடு அருகே மயங்கி கிடந்த முதியவர் சாவு
x

கொல்லங்கோடு அருகே மயங்கி கிடந்த முதியவர் இறந்தார்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு

கொல்லங்கோடு அருகே உள்ள மார்த்தாண்டன்துறை மீனவ கிராம பாலத்தின் அருகில் சம்பவத்தன்று 70 வயது முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அந்த பகுதி வழியாக சென்ற மீனவர்கள் பார்த்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் பெயர் மற்றும் ஊர் விவரம் தெரியவில்லை. இவர் அந்த பகுதியில் உள்ளவர்கள் கொடுத்ததை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story